தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை – முன்னாள் அமைச்சர் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 23, 2021

1 Comments

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கோரியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை விவகாரங்கள், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது செப்டம்பர் 6 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு விஷயத்தில் அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் 50% மாணவர்களுடன் இயக்கவிருக்கும் பள்ளியில் அந்த 50% மாணவர்களும் கொரோனா தொற்று இல்லாத மாணவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விதிகளை பின்பற்றி தான் வகுப்புகளை நடத்த வேண்டும், இல்லையென்றால் அது மாணவர்களுக்கு ஆபத்தாக முடியும் என அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்கவில்லையா.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews