புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் உட்பட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்த நிலைமையை சரி செய்ய முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டன. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பள்ளிகள் திறப்பது தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளும் திறக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்படுவதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது என தெரிவித்தார். சமீபத்தில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.