இந்திய ராணுவத்தின் NDA தேர்வை பெண்களும் எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளது.
NDA தேர்வு:
இந்திய ராணுவ பணிகளுக்கு மூன்று முறைகளில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இந்திய ராணுவ அகாடமி (IMA), அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA), தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) ஆகியவற்றில் முப்படைகளுக்கான அதிகாரிகளைத் தயார் செய்யும் நோக்கில் பயிற்சிகள் தரப்படுகிறது. நுழைவு தேர்வு மூலம் இந்த பயிற்சி மையங்களில் சேரலாம். 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஐஎம்ஏ, ஓடிஏ ஆகிய அகாடமிகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்டிஏ அகாடமியில் ஆண்கள் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத அனுமதிக்கப்ட்டுள்ளனர். பெண்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பெண்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், ஐஎம்ஏ, ஓடிஏ ஆகிய இரு அகாடமி வழியே பெண்கள் ராணுவத்தில் நுழைய வழி இருக்கிறது. என்டிஏ என்பது இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் மத்திய அரசு பெண்களை அனுமதிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தது.
விசாரணையின் முடிவில், செப்டம்பர் 5ஆம் தேதி யுபிஎஸ்சியால் நடத்தப்படும் என்டிஏ அகாடமிக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இந்திய ராணுவத்தில் பாலின பாகுபாடு பார்க்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஆண்களுக்கு நிகரான பதவிகளில் பெண்களையும் அமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.