Breaking

Wednesday, August 18, 2021

தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – நாளை ( ஆகஸ்ட் 19ம் தேதி ) குலுக்கல் முறை!

தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 19ம் தேதி குலுக்கல் முறை!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. நாளை 58 தனியாா் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டாய கல்வி உரிமை:
தமிழகத்தை பொறுத்தவரை கட்டாயக்கல்வி அடிப்படையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். தனியார் பள்ளிகளில் 25% ஏழை குழந்தைகள் ஆரம்ப வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் கல்வி அவசியம் என்னும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் 58 தனியாா் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,925 குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து 155 தனியார் பள்ளிகளில் 1,202 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேவையான சான்றுகள் இணைக்கப்படாததால் 162 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை உடைய மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சரியான ஆவணத்தை வழங்கி குழந்தைகளை சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு ஒதுக்கிய அறிமுக வகுப்புகள் எண்ணிக்கையை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 58 பள்ளிகளில் குழு அமைத்து குழுக்கள் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த குழுக்கள் முறையானது வரும் 19ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதில் குறிப்பிட்ட 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனவும், அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog