மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் மாணவர்களுக்கான ஆன்லைன் தொழில் வழிகாட்டி இணையத்தில் ஆசிரியர்களுக்கான பதிவு செய்வதற்கு நாட்களை நீட்டித்து அறிவித்துள்ளது.
ஆன்லைன் வழிகாட்டி:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை குறித்த குறிப்பிட்ட ஆன்லைன் இணையதள போர்ட்டலை ஆகஸ்ட் 4ம் தேதி அன்று அறிமுகப்படுத்தியது. மாணவர்களுக்கான இந்த இணையதளத்தின் மூலமாக தொழில், கல்லூரி சேர்க்கை, பாட பிரிவுகள், உதவித்தொகை மற்றும் போட்டி தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்கள் குறித்தும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பயிற்சி அமர்விற்காக இணையதளத்தில் பயிற்சி அளிக்க இருக்கும் இரண்டு ஆலோசகர்கள் அல்லது ஆசிரியர்களின் விவரங்களை சமர்ப்பிக்க சிபிஎஸ்இ தனது கல்வி வாரியத்தில் இணைத்துள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. முன்னதாக ஆசிரியர்கள் இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 20ம் தேதி இறுதி நாளாக நிர்ணயித்தது. தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இதற்கான அவகாசத்தை செப்டம்பர் 6ம் தேதி வரை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் வழிகாட்டுதல் ஆலோசனைகள் செப்டம்பர் 10ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் மாணவர்கள் மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெறலாம்.முன்னதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முன்னதாக கொரோனா காலத்தில் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் மன நலம் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இதேபோல், ஒரு இணையதளத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.