JNU நுழைவுத்தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – காலஅவகாசம் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 29, 2021

Comments:0

JNU நுழைவுத்தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – காலஅவகாசம் நீட்டிப்பு!

தேசிய தேர்வு முகமை ஜவஹர்லால் நேரு பல்கலையின் 2021 நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது.

நுழைவுத்தேர்வு விண்ணப்பம்:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தேசிய அளவிலான நுழைவு தேர்வின் மூலமே நடத்தப்படுகிறது. இதற்காக JNUEE தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலையின் பிஎச்டி படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தவிர மற்ற அனைத்தும் கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்வர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு இறுதி தேர்வு செய்யப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முன்னதாக JNUEE 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 27ம் தேதி வரை மாணவர்கள் JNUEE 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 27ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் மாணவர்கள் அமைப்பில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் JNUEE 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணம் ஆகஸ்ட் 31ம் தேதி இரவு 11:50 வரை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் உள்ள மாற்றங்களை செய்வதற்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு www.nta.ac.in, https://jnuexams.nta.ac.in என்ற இணையதளத்தை அணுகுமாறும், மேலும் அதிக விவரங்களுக்கு 011-40759000 என்ற எண்ணில் NTA வை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews