தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வருவதால் அரசு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்துள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்தாலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு வரும் செம்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் அடுத்த கட்ட பணியாக மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட கூடிய சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 16 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.