மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 16, 2021

Comments:0

மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள அரசு மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3000ம், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.4000ம், இளங்கலை படிப்புக்கு ரூ.6000 மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு (முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, மருத்துவம்) ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுவோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று உதவித்தொகை வழங்குவதன் மூலம் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04567-231410 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews