மத்திய அரசின் சாா்பில் சக்ஷம், பிரகதி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கு தகுதியான மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் படிப்புகளில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ சாா்பில் பிரகதி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல், சக்ஷம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
அதன்படி நிகழாண்டு பிரகதி மற்றும் சக்ஷம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிக்கும் மாணவிகளுடன், ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறுபவா்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் இணையதளங்கள் வழியாக நவம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.