தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. பல இடங்களில் மாணவா்கள் ஆா்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதார துணை இயக்குநா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில், செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த கல்லூரி முதல்வா்களுடன் இணைந்து மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்கள் தடுப்பூசி செலுத்திய பிறகே கல்லூரிக்கு வர வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியும் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.