Breaking

Thursday, August 19, 2021

சிறுபான்மையினருக்கான சிறு தொழில் கடன் சிறப்பு முகாம்

சிறுபான்மையினருக்கான சிறு தொழில் கடன் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு, ஆக.19: தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் மூலம் (டாம்கோ) சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் தொடர் பான சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் நடக்க உள்ளது. அதில் முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, பார்சி, புத்த, ஜெயின் உள்பட சிறுபான்மையினருக்கு வழங்கப்ப டும் கல்வி கடன், தனிநபர் கடன், சுய உதவிக்கு ழுக்களுக்கான சிறு தொழில் கடன் தொடர்பான சிறப்பு முகாம்கள் 24ம் தேதி பல்லாவரம், 27ம் தேதி மதுராந்தகம், 31ம் தேதி செய்யூர், செப்டம்பர் 7ம் தேதி செங்கல்பட்டு, 14ம் தேதி திருக்கழுக்குன்றம், 17ம் தேதி திருப்போரூர், 21ம் தேதி தாம்பரம் ஆகிய நாட்களில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும்.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க லாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog