தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும், இந்தியா-தைவான் இணைந்து வழங்கும் எம்.டெக். விஎல்எஸ்ஐ டிசைன் பட்டப் படிப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத், தொடக்க விழாவில் பங்கேற்றார்.
சாஸ்த்ரா, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடனும், தைவானில் உள்ள ஆசிய பல்கலைக்கழகம் மற்றும் யுவான்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் வைத்துள்ள கூட்டு முயற்சியை பாராட்டினார்.
அவர் பேசும்போது, “இந்தியா மின்பொருள் உற்பத்தி வாய்ப்பில் தவறவிட்ட இடத்தை பிடிப்பதற்கு தயாராகி வருகிறது. மேலும் இது பிரதம மந்திரியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை பிரதிபலிப்பதாக உள்ளது” என்றார். இன்டர்ன்ஷிப் வாய்ப்பு
எம்.டெக். விஎல்எஸ்ஐ டிசைன்பட்டப் படிப்பில் (இன்ட கிரேட்டட்சர்க்யூட் தயாரிப்பு) சேரும் மாணவர்கள் முதலாமாண்டு படிப்பைசாஸ்த்ராவில் படிப்பதோடு, கோடை விடுமுறை கால இன்டர்ன்ஷிப்பை ஒசூரில் உள்ள டாடாஎலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்வர். 2-ம் ஆண்டில்தைவான் பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர்வதோடு அங்குள்ள தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்வர். தொடக்க விழாவில் ஆசிய பல்கலைக்கழகம் மற்றும் யுவான்சி பல்கலைக்கழகத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பி.ரான்ஜன், தைவான் கல்வித் துறையின் நிர்வாக இயக்குநர் பீட்டர் சென் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.