தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் அமலுக்கு வரும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் கூறிய நிலையில், அதனை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் அதில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அகவிலைப்படி வழங்க வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கிளை தலைவர் ராமசாமி கூறியதாவது, 2020 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 11 சதவீத உயர்வை அறிவித்ததை தொடர்ந்து மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கூறினர். கொரோனா தொற்றின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலை நிவாரண அதிகரிப்பை அரசாங்கம் முடக்கியது. அதன்பின் தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 சதவீத அகவிலை நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
சுதந்திர போராட்ட ஓய்வூதியதாரர்கள், அவர்களை சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் மகள்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி நிவாரணத்தை 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக அதிகரிக்க இயக்குநர் மீனு பத்ராவின் உத்தரவின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் அமலுக்கு வரும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி உள்ளது கவனிக்கத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.