பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
ஆந்திர மாநிலத்தில் நோய்த்தொற்று பரவும் விகிதம் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதற்காக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அம்மாநிலத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நோய்த்தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளால் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேரடி வகுப்புகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மடினே பள்ளி பகுதியில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயர்நிலை பள்ளியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், துவக்க பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த விடுமுறை தொடரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலமும் பள்ளிகளை திறந்த வேகத்தில் மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.