தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் எச்சரிக்கை:
கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11, 12ம் வகுப்புகள், கல்லூரிகள், பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கோவை கலெக்டர் சமீரன் கூறியதாவது பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும். எவ்விதமான நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் வகுப்பறைகள், பொது இடங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆகஸ்ட் 28 முதல் 30ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் வகுப்பறைகளில் சமூக இடைவெளி விட்டு பெஞ்சுகள் அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல், வாசலில் சானிடைசர் வைப்பது, மாணவர்கள் உள்ளே வரவும், வெளியேறவும் தனித்தனி வழிகளை பின்பற்றுவது போன்றவைகளை கடைபிடிப்பதோடு காய்ச்சல் உள்ள மாணவர்களை அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.