கருணை பணிக்காக 10 ஆண்டாக 25,000 பேர் காத்திருப்பு... கரூர் பணி நியமனத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தி
This Tamil language newspaper clipping discusses controversy surrounding compassionate appointments in Tamil Nadu.
It highlights that over 25,000 individuals have been waiting for 10 years for compassionate jobs.
The article mentions concerns from government employees regarding these appointments.
A specific incident involving 32 people in Karur is highlighted as a point of contention
-நமது நிருபர்-
அரசு பணிகளில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர் கள் பணியின்போது இறந் தால் அவர்கள் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்ப டுவது வழக்கம். அதன்படி, அரசு பணியாளர் இறந்த தேதியில் இருந்து ஆண் டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண் ணப்பிக்கும் வாரிசுகளுக்கு காத்திருப்பு வரிசையின்படி பணி நியமன ஆணை வழங் சுப்படும்.
விண்ணப்பிக்கும் வாரிசுகள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தி ருக்க வேண்டும். அவர்க னின் கல்வி தகுதிக்கேற்ற அடிப்படையில்தான் பணி
நியமனம் வழங்கப்படும். இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுருணை வேலைக்கு 25
ஆயிரம் பேர் விண்ணப் பித்து காத்திருக்கின்றனர்.
ஆணால், கரூரில் கடந்த ஆண்டு நடந்த தவெசு கூட் டத்தில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் வாரிசுகள் 32 பேருக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங் கியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான வழக்குஐகோர்ட்கிளையில் நடந்து வருகிறது.
இது அரசு ஊழியர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் பாலசுப்பிரம ணியன் ஆகியோர்கூறியது: கரூர்கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் 2 பேருக்கு கருணை அடிப் படையில் பணி நியமன
ஆணை வழங்குவதை வர வேற்கிறோம்.
அதேநேரம் தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் கடந்த 10 ஆண்டு களாக கருணை வேலைக்கு காத்திருக்கின்றனர். கருணை பணி நியமனம் தொடர்பாக கடந்த ஆட்சியாளர்கள்ஒரு அரசாணை வெளியிட்டனர்.
அதில் ஒப்பனிக்கப்பட்ட பணிகளில் 5 சதவீதம் மட் டுமே கருணை அடிப்ப டையில் நியமனம் செய்ய வேண்டும் என்று உள்ளது. இதனால் இணி குரூப் சி' பணி நியமனமே இல்லை என்ற நிலை உள்ளது. இந்த அரசாணையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தவெக ஆட்சியாளர்களிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
அதேநேரம்,கரூர் கூட்ட
நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நிய மனம் வழங்குவது பாரபட் சமானது. கருணை அடிப் படையில் பணி நியமனம் வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் பல ஆயிரம் குடும்பங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு தீர்வுகாணும் வகையில் விதி களை தளர்த்தி சிறப்பு நிகழ் வாக ஒருமுறை மட்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி விண்ணப்பித்து காத்திருக் கும் எல்லாருக்கும் பணி வழங்க வேண்டும். இதன்மு லம் கரூரில் வழங்கிய பணி நியமனத்தால் அரசுஊழியர் களிடம் ஏற்பட்டுள்ள அதி குப்தியை முதல்வர் போக்க வேண்டும். இவ்வாறு அவர் கள் கூறினர்.
Saturday, July 11, 2026
கருணை பணிக்காக 10 ஆண்டாக 25,000 பேர் காத்திருப்பு... கரூர் பணி நியமனத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தி
Government Employees
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.