Naukri போன்ற வேலைவாய்ப்புக்கான இணையதளங்களில் வேலை வேண்டி பதிவு செய்வோரை குறிவைத்து மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது . வேலைவாய்ப்புக்காக www.naukri.com போன்ற இணைய தளங்களில் வேலை தேடுவோர் தங்களை பற்றிய முழு விபரங்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைக்கிறார்கள். அதனை பார்வையிடும் மோசடி நபர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக பொய்யாக கூறி வேலை தேடுவோரை தொடர்பு கொண்டு பிரபல நிறுவனங்களின் HR மேனேஜர் பேசுவதாகவும் கூறி நம்ப வைத்து Interview செய்வது போல் நடித்து ஏமாற்றி Registration fees , Processing fees , Verification fees என பல வகைகளில் பணம் பெற்று மோசடி செய்து விடுகிறார்கள். வேலை தரும் பெருநிறுவனங்கள் எக்காரணம் கூறியும் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களிடம் பணம் வசூலிப்பதில்லை.
எனவே பிரபல நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக உங்களை தொடர்புகொண்டு பேசுவதாக கூறினால் அந்த நிறுவனங்களை முடிந்தவரையில் அவர்களை நேரடியாக தொடர்புகொண்டோ , உங்களது நண்பர்கள் மூலமாக தொடர்புகொண்டோ அங்கு குறிப்பிட்ட பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெறுகிறதா என்பது பற்றி முழுவிபரமும் சேகரித்து அந்நிறுவனத்தின் Official Website மூலமாக நிறுவனத்தை தொடர்பு கொண்டும் ஆட்சேர்க்கை பற்றி ஊர்ஜிதம் செய்து கொண்டு மோசடி நபர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சைபர் கிரைம் காவல்நிலையம்
கோவை மாநகர்
சைபர் கிரைம் காவல்நிலையம்
கோவை மாநகர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.