TET நிபந்தனைகளை நீக்கம் செய்து அறிவிப்பு ஆணை வெளிவிட வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 06, 2021

Comments:0

TET நிபந்தனைகளை நீக்கம் செய்து அறிவிப்பு ஆணை வெளிவிட வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை!

பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனையுடன் நிரப்புதல் தொடர்பான இயக்குநர் செயல்முறைகள் (ந.க.எண் 88573/டி/1/இ4/2012) 16.11.2012-ம் நாள் தான் வெளியிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்து வந்த பள்ளிக் கல்வித்துறை நடைமுறைகளின்படி அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற (Non-Minority) பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற 1500 ஆசிரியர்கள் மட்டும் தகுதித் தேர்வு நிபந்தனையால் இன்று வரை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். மாத ஊதியத்தை தவிர வேறு எவ்வித பணப்பலனும், பதவி உயர்வும் இன்றி கடந்த 10 ஆண்டுகளாக மிகுந்த மன வேதனையுடன் பணி செய்து வருகின்றோம்.

இதே கால கட்டத்தில் தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி (Govt. schools) ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (ந.க.எண் 19850/சி/5/இ2/2014, நாள்:08.11.2017) மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

• அதே போல அரசு உதவி பெறும் சிறுபான்மைப் (Minority) பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகள் (ந.க.எண் 3416/டி1/01.03.2013) மூலம் தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து இவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவர்களும் காப்பாற்றப்பட்டு விட்டனர். இதுகுறித்து சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க சார்பில் மாவட்டம் தோறும் வைக்கப்பட்ட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கோரிக்கைப் பெட்டிகளில் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளோம். 1500 ஆசிரியர்கள் குடும்பங்களின் ஆ வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, நமது அரசு நல்ல முடிவினை எடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிவதிலிருந்து கருணை அடிப்படையில் எங்களுக்கும் விதி விலக்கு அளித்து காப்பாற்ற வேண்டும் என தங்களை பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கருணைப் பார்வை ஒன்றை மட்டுமே நம்பி காத்திருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews