தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதியில்லை
இது குறித்து, கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது:
ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி யுள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தவும் சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகி றது. வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை. இது தொடர்பாக, கல்வி அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபடுவார்கள்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தவறான தகவல் அளித்து, பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவது கண்டறியப்பட்டால், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.