"தமிழகத்தில் இன்று மேலும் 1,652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரேத்தில் 1,59,213 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 205 பேருக்கும், சென்னையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,99,225 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 1,859 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 45,178-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 19,391 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 23 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,686-ஆக அதிகரித்துள்ளது"

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.