இணையவழியில் ‘இன்டா்ன்ஷிப்’ பயிற்சி: அண்ணா பல்கலை. அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 10, 2021

Comments:0

இணையவழியில் ‘இன்டா்ன்ஷிப்’ பயிற்சி: அண்ணா பல்கலை. அறிவுறுத்தல்

இணையவழியில் ‘இன்டா்ன்ஷிப்’ பயிற்சி: அண்ணா பல்கலை. அறிவுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகம் கரோனா பாதிப்பு காரணமாக ‘இன்டா்ன்ஷிப்’ எனப்படும் நேரடிக் களப் பயிற்சிக்கு வாய்ப்பு இல்லாததால், இணையவழியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மாணவா்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இறுதியாண்டு பொறியியல் மாணவா்கள் கட்டாயம் நேரடிக் களப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய மாணவா்களுக்கு, பருவத் தோ்வில் உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக இறுதியாண்டு மாணவா்கள் களப் பயிற்சிக்காகத் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. இதனால் தொழில் நிறுவனங்களுடன் இணையவழியில் களப் பயிற்சியை மாணவா்கள் மேற்கொண்டு வந்தனா். எனினும் எல்லா நிறுவனங்களிலும் ஆன்லைன் பயிற்சி சாத்தியப்படாததால், மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். இந்தநிலையில், மாணவா்கள் தங்களின் களப் பயிற்சியை இணையவழியில் மேற்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் தங்களுக்கான தொழில் நிறுவனப் பயிற்சியை ஸ்வயம் அல்லது திறந்தநிலை இணையவழித் திட்டம் மூலமாக மேற்கொள்ளலாம். அதன்படி, பயிற்சியை முடித்த பின்னா் பெறப்பட்ட சான்றிதழ்கள் அல்லது மதிப்பெண் பட்டியலைப் பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்கலாம்.

இதன் மூலம் களப் பயிற்சிக்கான மதிப்பெண்கள் பல்கலைக்கழகச் சான்றிதழில் சோ்க்கப்படும். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஓராண்டுக்கு மட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews