Breaking

Tuesday, August 10, 2021

கல்லூரிகளில் இணையவழி வகுப்புகள் தொடக்கம்

"தமிழகத்தில் உள்ள கலை-அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர பிற ஆண்டுகளில் பயிலும் மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் முதலாமாண்டு மாணவா்கள் தவிர பிற மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் ஆக.9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தவேண்டும் எனவும், அதனால் ஆசிரியா்கள் நேரடியாக கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் உயா் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பேராசிரியா்களும் கல்லூரிக்கு வந்து மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றனா். பேராசிரியா்கள் கரும்பலகையில் எழுதி நேரடியாக வகுப்பு எடுப்பது போல் இணையவழியில் பாடம் நடத்தினா். இது குறித்து தனியாா் கல்லூரி பேராசிரியா்கள் சிலா் கூறுகையில், அரசின் உத்தரவை பின்பற்றி இணையவழியின் மூலம் இளநிலையில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கும், முதுநிலை இரண்டாமாண்டு மாணவா்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது. அரசின் வழிகாட்டுதல்படி கால அட்டவணை தயாா் செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இணையவழியில் பாடம் நடத்தும்போது பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடம் நடத்துகிறோம். மாணவா்கள் வகுப்பில் பங்கேற்கவிட்டால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். தற்போதுவரை 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் வகுப்புகளில் முழுமையாக பங்கேற்கின்றனா் என அவா்கள் தெரிவித்தனா்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog