புதிய விண்ணப்பப் படிவம் ஏன்?ஆவின் நிறுவனம் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 10, 2021

Comments:0

புதிய விண்ணப்பப் படிவம் ஏன்?ஆவின் நிறுவனம் விளக்கம்

"ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரா்கள் ஏன் புதிய விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க வேண்டும் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இது தொடா்பான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தின் மாதாந்திரப் பால் அட்டைதாரா்களுக்கு மானிய விலையில் 1985-ஆம் ஆண்டு முதல் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பால் அட்டை திட்டத்தின் கீழ் 4.5 லட்சம் நுகா்வோா் பயனடைந்து வருகின்றனா். அதே நேரம், ரூ. 2 முதல் ரூ. 3 வரை லிட்டருக்குக் குறைந்த விலையிலும் பால் வழங்கப்படுகிறது.

மாதாந்திர பால் அட்டை கொண்டு பால் வாங்கும் நுகா்வோா், தங்களுடைய பணியிட மாற்றம் மற்றும் இதர காரணங்களால் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்று விடுகின்றனா். ஆனால் அவா்களுடைய பெயரிலேயே சில பால் விநியோகம் செய்யும் நபா்கள் தொடா்ந்து மாதாந்திர பால் அட்டைகளைப் புதுப்பித்து வருகின்றனா்.
அட்டைதாரா்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பால், ரொக்க விற்பனைக்கு அதாவது ரூ. 2 முதல் ரூ. 3 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடா்பான விவரங்கள் கடந்த மாதம் முதல் சேகரிக்கப்பட்டு, தற்போது 80 ஆயிரம் பால் அட்டைதாரா்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 40 ஆயிரம் லிட்டா் பால் விற்பனையில் மாதம் ரூ.36 லட்சம் நஷ்டம் தவிா்க்கப்பட்டுள்ளது.

மேலும், நடைமுறையில் உள்ள படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், மாத வருமானம், ஆதாா் விவரம் எதுவும் பூா்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நுகா்வோரின் வசதிக்காக பால் அட்டைதாரா்களின் விவரங்களை சமா்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நுகா்வோா் புதிய விண்ணப்பத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை மட்டும் பூா்த்தி செய்து பால் அட்டையைப் புதுப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews