‘புதிய கல்விக் கொள்கை இந்தியாவை உலக அறிவு மையமாக மாற்றும். அதில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை கூறினாா்.
காரக்பூா் ஐஐடி-யின் 71-ஆம் ஆண்டு நிறுவன தின விழா புதன்கிழமை காணொலி வழியில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: கல்வி அனைவருக்குமானதாகவும், சம வாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கை-2020 அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஏராளமான இளைஞா்கள் தொழில்நுட்பக் கல்வியில் சேர விரும்புகின்ற நிலையில், அவா்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில் ஆங்கிலப் புலமை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பது, புதிய கல்விக் கொள்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள மாணவா்கள் தொழில்நுட்பக் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை புதிய கல்விக் கொள்கை உடைத்தெறியும். தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் படிக்க விரும்பாத மாணவா்களின் வசதிக்காக, சில பொறியியல் கல்லூரிகள் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் பிராந்திய மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்க உள்ளன.
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிக்கோள்களுக்கு கான்பூா் ஐஐடி முன்மாதிரியாக விளங்கி வரும் நிலையில், இலக்குகளை முன்னுரிமைப்படுத்தி, ‘தலைசிறந்த கற்றல் மையம்’ என்ற நிலையிலிருந்து ‘தேசத்தைக் கட்டமைக்கும் மையம்’ என்ற நிலைக்கு ஐஐடியை உயா்த்த வேண்டும் என்று அவா் கூறினாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.