உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கா.இளஞ்செழியன், குன்னுார், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அதிரடியாக உயர்வு பெற எளிதான வழி இருக்கையில், திட்டம் பல தீட்டுவது ஏன் என தெரியவில்லை! மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என உத்தரவிட்டாலே, அத்தனை பிரச்னையும் முடிவுக்கு வந்துவிடும் என்பது கண்கூடு. முக்கியமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அப்போது தான், அவர்கள் தரமாக கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபடுவர். அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால் பல்வேறு நன்மைகள் விளையும். பள்ளியின் சுகாதாரம் முதல், அனைத்து குறைகளும் உடனுக்குடன் சரி செய்யப்படும்.
ஏனோ, இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்வதில்லை. அரசு சம்பளம் மட்டும் வேண்டும்; அரசு பள்ளி வேண்டாமா? தனியார் பள்ளியில் தான் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை, ஏன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியமாக அள்ளிக் கொடுக்க வேண்டும்? தமிழை வளர்ப்பதாக கூறும் இந்த ஆட்சியிலாவது, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படுமா?

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் குறைக்கப்பட வேண்டும்.மாணவர்களின் எண்ணிக்கை கேற்ற படி ஆசிரியர் நியமனம் வேண்டும். ஆசிரியர்களது பிள்ளைகளை கட்டாயமாக அரசுப்பள்ளிகளில் சேர்த்தல் வேண்டும்.
ReplyDelete