Breaking

Friday, August 20, 2021

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம்பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ரூ.1000, ஆறு முதல் எட்டுக்கு ரூ.3000, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு ரூ.4000 மற்றும் இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.6000, உயர்கல்வி முதுகலை, தொழிற்கல்வி, மருத்துவம் படித்தால் ரூ. 7000 ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது 04567--231 410 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog