மதுரையில் மாநகராட்சி பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் (பி.டி.ஏ.,) நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணிக்குவரவேண்டாம்' என்றஉத்தரவால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது.
மாநகராட்சியில் 15 மேல்நிலை, 9 உயர், 16 நடு, 24 துவக்க பள்ளிகளில் 600 நிரந்தர ஆசிரியர்கள் உள்ளனர். 10க்கும் மேற்பட்ட மேல்நிலையில் கலைப் பிரிவு பாடங்களுக்கு ஆசிரியர்கள் ஒதுக்கீடு இல்லாததால் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பி.டி.ஏ., மூலம் நியமிக்கப்பட்டனர். 24 நர்சரி பள்ளிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் உள்ளிட்ட தற்காலிக ஆசிரியர் அனைவரும் 'ஆக.,1 முதல் பணிக்கு வரவேண்டாம்' என உத்தரவிடப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் கூறியதாவது: கலைப் பிரிவு மாணவர்களின் கல்வி பி.டி.ஏ., ஆசிரியர்களை நம்பி தான் உள்ளது. 2004க்கு பின் ரெகுலர் ஆசிரியர் நியமனம் இல்லை. கொரோனா முதல் அலையில் மூன்று மாதம் சம்பளம் வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இதன் பின் எங்களை மதிப்பூதியம் அடிப்படையில் நியமித்ததாக தகவல் வெளியானது. இந்தாண்டும் மூன்று மாதம் சம்பளம் வழங்கவில்லை. மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து அட்மிஷன் பணி எல்லாம் முடித்த பின் திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது.கலைப் பிரிவு மாணவர் ஆன்லைன் வகுப்புகளை 80 சதவீதம் பி.டி.ஏ., ஆசிரியர்கள் தான் எடுக்கின்றனர். அவர்கள் கல்வி பாதிக்கும் என்றனர்.மாநகராட்சி கல்விஅலுவலர் விஜயா கூறுகையில் “சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வந்த பின் இந்த ஆசிரியர்கள் அழைக்கப்படுவர். இவர்கள் நிலை குறித்து கமிஷனர் தான் முடிவு எடுக்க முடியும்” என்றார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.