முன்னணி பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலை கழகத்தின் கீழ் ஈரோடு, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இந்த முடிவானது மாணவர்களையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
6 சட்டக் கல்லூரிகள்:
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக சட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சட்டப்படிப்பு படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்ததும் 5 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கலாம். இதுபோன்று 5 ஆண்டு சட்ட படிப்பு படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப விநியோகம் துவங்கிய நிலையில் தற்போது தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் 6 இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்வி இயக்ககம் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் 14 அரசு சட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து சில புதிய சட்ட கல்லூரிகளை துவங்க திட்டமிடப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பிற்கென்று தனி துறை துவங்கப்பட்டு அதன் கீழ் 6 புதிய சட்ட கல்லூரிகளை துவங்குவதாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்ணாமலை பல்கலைக்கழகம் ஈரோடு, மயிலாடுதுறை, தென்காசி, திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சட்ட கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உயர் கல்வித்துறைக்கு அனுப்பிய நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது கருத்தைச் சமர்ப்பிக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மானிய குழுவின் கீழ் செயல்படும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கபடும் நிலையில் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டப்படிப்பு துவங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவினை மாணவர்கள் வரவேற்றுள்ளனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.