*அறம் தாங்கும் மனிதர்கள்*
திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வட்டம், அரசாணிப்பாளையம் என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்று தற்போது தனியார் பள்ளியில் தாவரவியல் பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வரும் ஆசிரியர் திரு. இராமராசு தன் கிராம பள்ளி மாணவர்களுக்கு கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கிட *'சுவரில்லா பணமில்லா பள்ளி'* என்ற சேவை அமைப்பு மூலம் கற்பித்தல் மற்றும் உடலியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள ஏதுவாக யோகா, சிலம்பம், நடனம், இசை, பேச்சு, ஓவியம், மாதிரி சிலை வடிவமைப்பு, மரம் வளர்ப்பு மற்றும் கிராமப்புற மாணவர்களின் திறன்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்துதல் போன்ற புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வருகிறார். தனியார் பள்ளியில் ஆன்லைன் கல்வி கற்பித்து அதில் தான் பெறும் அரை மாத ஊதியத்தில் இதற்கான கற்பித்தல் வளங்கள் வாங்க செலவிட்டுளார். கொரொனா கால கட்டத்தில் தனியார் பள்ளியில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்தமையால் வேறு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படினும் ஆசிரியர் திரு. ராம ராசு கையாண்டுள்ள இத்தகைய சேவை நோக்க செயல் அரிதிலும் அரிதானதே. இது குறித்து அவரிடம் கேட்ட போது , "நான் வறுமையின் நிலையினை பல்ரூபங்களில் கண்டவன். ' வறுமை சூழல் ' கல்விக்கு ஒரு தடையாக இருக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் இந்த *சுவரில்லா, பணமில்லா பள்ளி* உருவாக காரணம் " என்றார். "கற்பித்தல் செயின் கற்றல் பயனுரும்" என்ற உயரிய கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவான இந்த *சுவரில்லா பணமில்லா பள்ளியில்* தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆசிரியரின் இத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிக்கு கிராம பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த தொண்டு நிறுவனத்தை விளம்பரம் இன்றி, ஆரவாரம் இன்றி நடத்தி வரும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அறம் தாங்கும் மனிதர்கள் என்றென்றும் போற்றபடவேண்டியவர்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.