தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளிக்கல்வி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் ரொட்டி, முட்டை வழங்குவது குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
சத்துணவு திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளிக்கல்வி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி, முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கொரோனா பேரிடரால் படிப்பை நிறுத்திவிட்டு உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.