புதுச்சேரியில் இன்று முதல் (11.08.2021) ஆசிரியர் பட்டய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பட்டய படிப்பு:
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் (12.08.2021) தொடங்கியுள்ளது. இதற்கான விண்னப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் மேல்நிலைப் வகுப்பு அல்லது மற்ற படிப்புகளில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பட்டியல் இன மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அதிகபட்ச வயது 29 ஆக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும். மேலும் https://schooledn.py.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து 31.08.2021ம் தேதிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.