மத்திய அரசுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 1 வரை வரவேற்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் நுழைவுத்தேர்வு:
கல்வித்துறையில் கொரோனா தொற்று ஏற்படுத்திய பெரிய மாற்றத்தினால் அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாடங்கள், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் கீழ் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் 15, 16 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் ஆன்லைன் வழியாக நடத்தப்பட உள்ள இந்த தேர்வுகளுக்கு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், ‘மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவு தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட இருக்கிறது. அதன் படி தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட், ஜம்மு, ஹரியானா, குஜராத், ஆந்திர பிரதேசம், அசாம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை ஒருங்கிணைத்து, வரும் செப்டம்பர் மாதம் 15, 16 , 23, 24 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுகள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரி அறிவியல், பொருளாதாரம் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும், பிஎஸ்சி, மற்றும் பி.எட் போன்ற இளநிலை பட்டப் படிப்புகளுக்கும் ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது.
அதன் கீழ் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களையும், செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மத்திய பல்கலைக்கழகத்தின் http://cucet.nta.nic.in என்ற இணையதள முகவரியின் கீழ் வரவேற்கப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.