"பள்ளிகளில் கரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் நேற்று (ஆக. 16) முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பள்ளியின் வகுப்பறைகளை அதிகரிப்பது அல்லது பகுதிநேரமாக மாற்றுவது போன்றவற்றை பள்ளி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில் பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சிறிய அறிகுறி உள்ள மாணவர்களைக் கூட பள்ளியிலேயே பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.