தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து, சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்த நேரத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன் பிறகு கொரோனா இரண்டாம் அலை இன்னும் முழுமையாக குறையவில்லை என்று குறிப்பிட்டு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்வித்துறை கலந்தாலோசித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கலந்தாலோசனை ஏதும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் செப்டம்பர் 1 அன்று பள்ளி, கல்லூரிகளை திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏழை, எளிய மாணவர்கள் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 100% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரியவில்லை என்றும் அதனால் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர் சேர்க்கை போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.