Breaking

Sunday, August 29, 2021

7,979 ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு

"பள்ளிக் கல்வித் துறையில் 7,979 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை:

அரசுப்பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஏதுவாக அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 2006-ஆம் ஆண்டு 7,979 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவா்களுக்கான பணிக்காலம் கடந்த மாா்ச் மாதம் முடிந்துவிட்டது. இந்த 7,979 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-2024) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா்.

அதை பரிசீலனை செய்து 7,979 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு 2024 மாா்ச் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog