பிளஸ் 2 துணை தேர்வு: விடை திருத்தம் துவக்கம்
சென்னை-பிளஸ் 2 துணை தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று முதல் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், கடந்த கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு, எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். பிளஸ் 2வுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.மாறாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், துணை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு மட்டும், இம்மாதம் 6ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ் 2 மாணவர்கள்,26 பேர் உட்பட, 36 ஆயிரம் பேர் தேர்வுக்குவிண்ணப்பித்தனர். இந்த தேர்வு, 20ம் தேதி முடிந்தது.இதையடுத்து, இன்று முதல் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
எனவே, விடைத்தாள் திருத்தத்தில் அதிக கெடுபிடி இல்லாமல், மாணவர்களின் திறனுக்கு ஏற்பவும்,அவர்களின் விடையளிக்கும் தகுதியை ஆய்வு செய்தும், மதிப்பெண் வழங்க ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.