TRB Flash News: End to End encrypted முறையில் ஆன்லைனில் TRB தேர்வுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 31, 2021

1 Comments

TRB Flash News: End to End encrypted முறையில் ஆன்லைனில் TRB தேர்வுகள்

ஆன்லைனில் TRB தேர்வுகள்
ஆன்லைனில் TRB தேர்வுகள்: End to End encrypted முறையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆன்லைனில் தேர்வுகளை நடத்த TRB முடிவு.
செப்டம்பர் - நவம்பர் வரை ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
*TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.* *கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து,அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு,தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.மேலும்,TET,TRB தேர்வுகளும் நடத்தப்படவில்லை.இதனையடுத்து,கடந்த 2 ஆண்டுகளாக எந்த தேர்வுகளும் நடத்தப்படாமல் உள்ளது.* *இந்நிலையில்,ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை End To End Encrypted என்ற முறையில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.* *அதன்படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,TET,பாலிடெக்னிக் விரிவுரையாளர்,உதவி பேராசிரியர் போன்ற தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது*

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews