SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய YONO விதிகள்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் யோனோ வாடிக்கையாளர்களுக்கு சில புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பயனர் ஒருவர் தனது மொபைல் எண்ணின் உதவியுடன் மட்டும் யோனா சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
யோனா பயனர்கள்:
கொரோனா தொற்று நோய் காலத்தில் வங்கி சேவைகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியாததால், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் எழுச்சி கண்டுள்ளது. இந்த ஆன்லைன் பரிமாற்றம் சில நிதி மோசடிகளுக்கும் வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் SBI வங்கி தனது யோனோ சேவை பயன்பாட்டில் சில பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை சில புதிய, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பயனர்களுக்கு கொடுக்கிறது. அந்த வகையில் SBI யோனோ பயன்பாட்டில் உள்நுழைவதற்கு வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தினால் தான் SBI வங்கியின் யோனா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஒரு வேளை பயனர்கள் வேறு எண்ணை வைத்து உள்நுழைய முயற்சித்தால் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்ய SBI வங்கி அனுமதிக்காது என்று ஒரு வங்கி நிர்வாகம் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மோசடிகளை தவிர்க்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான FIS ன் அறிக்கையின்படி, கொரோனா தொற்று நோய்களின் போது நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இணையவழியில் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றங்களில் பயனர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிக்கை குறிப்பிட்டது. அந்த வகையில் கடந்த 12 மாதங்களில் 34% பேர் நிதி மோசடி ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளனர். குறிப்பாக 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 41% பேர் மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர். இதனிடையே SBI வங்கியின் யோனோ பயன்பாடுகள், கடந்த 2020 டிசம்பர் முடிவில் 32 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.