தமிழகத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காதவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வதன் மூலம் தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு பதிவு செய்வது அவசியமாகும். அதன் படி வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். மேலும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களாகவோ, தொலைதூர கல்வி பயில்பவர்களாக இருத்தல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் கல்வித்தகுதியின் அடிப்படையில் அதிகபட்சமாக 1000 ரூபய் வரை பத்தாண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனில், மாதந்தோறும் 200 ரூபாயும் தேர்ச்சி பெறாதவர் எனில் 300 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் வழங்கப்படும். மேலும் கல்லூரி இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கு 600 ரூபாய் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனுடன் ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.