தமிழகத்தில் பொதுத்தேர்வு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வுக்கான படத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து முடிவெடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி முடிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருந்த நிலையில் முதலில் கடந்தாண்டு மத்திய கல்வி வாரியம் 1 முதல் 12ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டங்களை குறைத்தது.
அதனை தொடர்ந்து 2021-22ம் கல்வியாண்டிலும் அதே நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது. அதே போல் தமிழகத்திலும் கடந்த கல்வி ஆண்டில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிப்பட்டது. கிட்டத்தட்ட 50% அளவு படத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. அதே போல் இந்த வருடம் பொதுத்தேர்வு பாடத்திட்டம் குறைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து வருகிறது. இந்த ஆன்லைன் கல்வியில் பாடங்கள் புரிவதில்லை என பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அனைத்து பாடங்களையும் நடத்துவது கால விரயத்தை அதிகரிக்கிறது. அதனை தொடர்ந்து குறைவான நேரத்தில் தேர்வுக்கு தயாராவது மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை அளிக்கிறது. இதனை கருத்திற்கொண்டு பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வு பாடங்களை குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.