மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 2021-22 கல்வியாண்டில் சியுசிஇடி நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படமாட்டாது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைப்படி, மத்திய பல்கலைக்கழகங்களில் அனைத்து இளங்கலை பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த பொது நுழைவு தேர்வு (சியுசிஇடி) கட்டாயம் என அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்தது. இந்நிலையில் அந்த குழு அறிவித்துள்ள பரிந்துரைப்படி மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் அனைத்து இளங்கலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை பொது நுழைவு தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இந்த நடைமுறை 2021-22 கல்வியாண்டில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பின் படி, கொரோனா பரவல் காரணமாக மத்திய பல்கலைக்கழகங்களில் 2021-22 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை முந்தைய நடைமுறை அடிப்படையிலேயே செய்யப்படும் எனவும் ஏற்கனவே அறிவித்துள்ள இளங்கலை சியுசிஇடி நுழைவு தேர்வு 2022-23 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.