ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
தமிழகத்தில் தமிழ்மொழியை வளர்ப்பதற்கும், தமிழ்மொழியை வளர்பவர்களை ஆதரிப்பதற்கும் பல சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல தமிழ் அறிஞர்கள் இந்த திட்டங்களின் மூலம் பலனடைகிறார்கள். மேலும், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆண்டு தோறும் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்கள், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பலனடைய விரும்பும் தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சித் துறையில் நேரில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2021-2022ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கும் கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.1.2021ம் தேதி நிலவரப்படி, வயது 58 நிறைவடைந்து இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழ், தமிழ்ப்பணி செய்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ் தொண்டு செய்தமைக்கான தகுதி நிலைச் சான்றிதழ், இரண்டு தமிழ் அறிஞர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் அறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3,500 மற்றும் ரூ.500 மருத்துவப்படி தொகையாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் அரசு வழங்கும். இந்த திட்டம் தொடர்பான அதிக விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், 0416-2256166 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.