தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை விண்ணப்பம்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து இன இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியாக பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெறாதவர்களும், 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பயின்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் வயது வரம்பு 45 ஆகவும், மற்றவர்களுக்கு 40 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது. மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி தகுதி பதிவு செய்து ஒரு ஆண்டு 30.06.2021 அன்றுடன் முடிவடைய வேண்டும். மேலும் அவர்கள் கல்வி சான்றின் அசல், வேலைவாய்ப்பக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவை வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தால் வங்கி கணக்கு புத்தகம், அசல் கல்வி சான்று, வருவாய்த்துறை சான்று ஆகியவற்றை கொண்டு சுயஉறுதிமொழி சான்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.