கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தால் உரிய நேரத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு:
கர்நாடகா மாநிலம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் ஒன்று. இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. இதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் தவித்து வரும் சூழலில் மாநில அரசுக்கு தெளிவான திட்டமிடுதல் அவசியமாகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுவது சரியாக இல்லை. இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அனைத்து நடவடிக்கைகளும் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பில் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டு விரிவான ஆலோசனை செய்யப்பட உள்ளது. பள்ளிகள் திறப்பதற்குள் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறும் என அவர் தெரிவித்தார். தடுப்பூசி போடுவதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கும் படிப்படியாக பள்ளிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் 5 சதவிகிதம் உருமாறிய கொரோனா வைரஸாக உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.