நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்பில்லை – மத்திய அரசு திட்டவட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 23, 2021

Comments:0

நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்பில்லை – மத்திய அரசு திட்டவட்டம்!

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மற்றும் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஒத்திவைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொற்று பாதிப்பு குறைந்த பாடில்லை. தற்போது இந்தியா முக்குவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. இது முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா அச்சத்தால் பள்ளி, கல்லூரிகள், மற்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம அலை வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுக்கும் இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று பெருந்தொற்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் நீட் தேர்வு, கல்வி, வேலை போன்றவற்றின் நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் அதே போல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அலட்சியம் இன்றி கவனத்துடன் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என கல்வியாளர்கள் தேர்வு பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews