Breaking

Tuesday, July 06, 2021

'இஸ்ரோ' ஆன்லைன் பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு

'இஸ்ரோ'வின் தொலை உணர்வு சார்ந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில், 'தொலை உணர்வின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியில் பயன்பாடு' என்ற தலைப்பில் வரும் 26 முதல் 30ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 'யுடி யூப்' வாயிலாக நேரடியாகவும் ஒளிபரப்பப்படும். தினமும் காலை 10:00 முதல் 10:45; மதியம் 12:00 முதல் 12:45 மணி வரை வகுப்பு நடைபெறும். வகுப்பு முடிந்தவுடன், அதில் இருந்து வினாடி - வினா போட்டியும் நடத்தப்படும். இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறுகையில், ''மாணவர்கள், தங்களது தகவல் மற்றும் புகைப்படத்தை இஸ்ரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன், இ - மெயில் முகவரிக்கு, கடவுச்சொல் அனுப்பப்படும்.''அதைப் பயன்படுத்தி, ஆன்லைன் வழி படிப்பில் இணையலாம். ஆக., 5ல் இஸ்ரோ சான்றிதழ் வழங்கப்படும். 'இப்பயிற்சி, தொலை உணர்வு சார்ந்த ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog