Breaking

Friday, July 30, 2021

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால் மூலம் 14.08.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் காப்பீடு முகவர் :

தமிழகத்தில் அஞ்சல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் தேர்வுகள் வைத்தும் காலிபணியிடங்களை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த பணியில் சேர 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மத்திய மாநில அரசு அலுவலர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆயுள் காப்பீடு முகவர் ஆர்வம் உள்ளவர்கள் முன்னாள் படை வீரர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்தை உங்கள் பகுதியின் அருகிலுள்ள அஞ்சலகத்தில் இருந்து பெற்று கொண்டு முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல், கல்வி தகுதி சான்றிதழ்கள் போன்றவற்றை இணைத்து காரைக்குடி கோட்டம் 630003 என்ற முகவரிக்கு 14.08.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் ரூபாய் 5000 என்எஸ்சி பாத்திரத்தை ஜனாதிபதிக்கு இது செய்து சமர்ப்பிக்க வேண்டும் என காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog