தமிழகத்தில் ‘இந்த’ ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதில் விலக்கு – ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து பள்ளிக் கல்வித்துறை விலக்கு அளித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு விலக்கு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் பிறகு கடந்த மே மாதம் கொரோனா ஊரடங்கு, வெயின் தாக்கம் காரணமாகவும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்ப்பிணிகளுக்கும், இணை நோய்கள் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. அதனால் அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் எனவும், இதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணி, பள்ளிக்கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல், பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல், மதிப்பீட்டு விவர பதிவேடுகளை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள…
அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட உரிய ஆவணங்களை மாவட்ட முதன்மை அலுவலரிடம் சமர்ப்பித்தால் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.