12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை காலை 11 மணி முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 30, 2021

Comments:0

12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை காலை 11 மணி முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2021
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தொடர்பான செய்திக்குறிப்பு
06.08.2021 முதல் 19.08.2021 வரை நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி 23.07.2021 முதல் 28.07.2021 வரையிலான நாட்களில் விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 31.07.2021 (சனிக்கிழமை) முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE AUGUST 2021 CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை ‘Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்த பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசாணை (நிலை) எண். 105, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்.12.07.2021-ன்படி, 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதி, ஆகஸ்ட் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கட்டாயம் அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும். மேலும், அம்மாணவர்கள் தற்போது எழுதவுள்ள துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே +2 தேர்வின் இறுதியான மதிப்பெண்கள் ஆகும். அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு, ஆகஸ்ட் 2021 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் செய்திக்குறிப்பு வெளியிட கோருதல் - தொடர்பாக.

நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி இச்செய்திக் குறிப்பை தங்கள் நாளேட்டில் / வானொலியில்/ தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடுமாறும், ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

‘இது விளம்பரம் அல்ல' எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews