'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் நடத்திய ஸ்டிரைக்கில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்து, கமிஷனர் நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த, 2019 ஜன., 22 முதல், 30 வரை நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், தண்டனைகளை ரத்து செய்து, பிப்., 2ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, ஆசிரியர்கள்மற்றும் ஆசிரியர் அல்லாதபணியாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவை நிலுவையில் இருந்தால், அவற்றை கைவிட்டு உரிய ஆணைகள் வழங்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கி இருந்தால், அவற்றை ரத்து செய்ய வேண்டும்.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அதையும் விலக்கி, அந்த நாட்களை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்.இந்த நடவடிக்கைகளை, முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு பணி பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.